மதுரை ஆவின் விற்பனை மையங்களில் கடுமையான பால் கொள்முதல் பாதிப்பு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக வெண்ணெய் மற்றும் நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என அதிகாரிகள் கூறி வருகின்றனர் கடும் வெயில் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு காரணமாக பால் உற்பத்தி பல மடங்கு குறைந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சரிந்து வரும் பால் கொள்முதல்:
தமிழகத்தில் மழைக்காலங்களில் ஆவின் நிறுவனம் தினமும் 33 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்யும். ஆனால், தற்போதைய வறட்சி காரணமாக இந்த அளவு 28 லட்சம் முதல் 29 லட்சம் லிட்டர் வரை குறைந்துள்ளது. குறிப்பாக, மதுரை ஆவினில் தினமும் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் 1.80 லட்சம் லிட்டர் பாலும் முழுமையாக பாக்கெட் பாலாக மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, டெப்போக்களுக்குச் செல்லும் 72 வழித்தடங்களில் சில நாட்களாக பால் கொள்முதல் அளவு 1.50 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாக ஆவின் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வெண்ணெய் மற்றும் ஒரு லிட்டர் நெய் பாக்கெட்டுகள் கிடைக்காமல் நுகர்வோர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தனியார் நிறுவனங்களின் போட்டி மற்றும் தேனி பால் வரத்து:
ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ₹10 வரை கூடுதலாக விலை வழங்குவதால், பால் உற்பத்தியாளர்கள் தங்களின் பாலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளனர். இந்த பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தேனி மாவட்டத்திலிருந்து தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் மதுரைக்குக் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், தற்போதைய தேவைகளுக்கு அது போதுமானதாக இல்லை. தற்போது கிடைக்கப் பெறும் குறைந்த அளவிலான வெண்ணெய் முழுவதும் நெய் தயாரிப்புக்கே பயன்படுத்தப்படுவதால், வெண்ணெய் விற்பனை கடந்த 3 மாதங்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளும் ஆவின் நிலையும்:
ஏற்கனவே பல பால் சொசைட்டிகள் நலிவடைந்துள்ள சூழலில், தமிழக அரசு உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்த லிட்டருக்கு ₹3 ஊக்கத்தொகை திட்டம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட ஊக்கத்தொகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொள்முதல் விலை உயர்த்தப்படாத பட்சத்தில் ஆவினின் வாடிக்கையாளர்கள் தனியார் பாலுக்கு மாறும் நிலை ஏற்பட்டு, ஆவினின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகளிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது முதலில் பெண் அதிகாரி ஒருவர் ஆவின் வெண்ணை உற்பத்தி செய்யப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என நம்மிடம் தகவல் தெரிவித்தார் ஆனால் நேரடியாக களத்தில் சென்று பார்த்த பொழுது அங்கு விற்பனையாளர்கள் சொன்ன தகவல் மிக அதிர்ச்சியாக உள்ளது
ஐந்து மாதங்களாக எங்களுக்கு வெண்ணை தரவில்லை எனவும் நீங்கள் வெளியில் போய் மற்ற கம்பெனி தனியார் வெண்ணை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறினார் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிய 20 நிமிடத்தில் மற்றொரு ஆண் அதிகாரி நமது அரசியல் டுடே மதுரை தலைமை நிருபருக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார் சார் நீங்கள் யார் என்று கேட்டார் நான் வாடிக்கையாளர் என்று சொன்னேன் அவர் சொன்னது சார் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே உற்பத்தி இல்லை எனவும் உற்பத்தியானது ஈரோடு மதுரை சென்னை மட்டுமே உற்பத்தி ஆகிறது ஈரோட்டில் உற்பத்தி செய்வது பழுதாகி உள்ளது எனவும் தற்பொழுது சென்னை மதுரை மட்டுமே விபத்தில் உள்ளது எனவும் இதிலும் எங்கள் உபயோகத்துக்காகவே 20 கிலோ வெண்ணெய் பயன்பாட்டுக்கு வைத்துள்ளோம் என கூறியுள்ளார் சொல்வது முற்றிலும் பொய் என்னும் நிரூபிக்கும் வகையில் எனக்குத் தெரிந்த ஒரு தனியார் ஏஜென்சியிடம் வெண்ணெய் இருக்கிறதா என்று கேட்டேன் அண்ணன் உங்களுக்காக நான் தருகிறேன் யாரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னார் நான் அவரிடம் போய் 10 கிலோ அதாவது ஜூன் மாதம் புரோடக்ஷன் வெண்ணையானது சுமார் 10 கிலோ என்னிடம் கொடுத்தார் அதை பார்த்தவுடன் எனக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது அவர் நீங்கள் வந்ததால் தான் நான் இதை தந்தேன் மற்ற இடங்களில் யாரும் கேட்டால் நிச்சயமாக 300 ரூபாய்க்கு குறைந்து கொடுக்க மாட்டோம் மற்ற கம்பெனி தனியார் நிறுவனங்கள் எல்லாம் 350 ரூபாய் விலைக்கு மேல் உள்ளது.
மேலும் ஆவின் வெண்ணையானது மிகுந்த தரத்துடன் இருப்ப அதிக அளவு ஹோட்டல் மற்றும் இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால் அதிக அளவு வதுக்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தார். பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆவின் வெண்ணைகளை அதிகாரிகள் கூட்டுவேட சேர்ந்து பதுக்கி வைக்கிறார்களா அல்லது உண்மையிலேயே தட்டுப்பாடாக என ஆவின் நிர்வாகமே விளக்கம் அளிக்க வேண்டும் நான் முதலமைச்சரிடம் செல்வேன் என்று சொன்னதற்கு பரவாயில்லை சொல்லுங்கள் என்று அலட்சியமாக பதிலும் கூறுகிறார் பால்வளத்துறை அமைச்சர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு அனைத்து தரமான ஆவின் பொருட்கள் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.




