ஏற்கனவே ஒன்றும் முதல் ஐந்தாம் வகுப்புவரை முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு வழங்கி வந்த நிலையில் இந்த திட்டத்தை எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டு பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்து இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் விரிவாக்க தொடக்க விழா நடைப்பெற்றது. பள்ளியில் பயின்றுவரும் 6ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் 98 பேருக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது ஏற்கனவே இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் 68 பேர் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான 166 மாணவர்களுக்கு இன்று பெருந்தலைவர் காமராசர் காலை உணவான பொங்கல் சாம்பார் உடன். சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

தலைமையாசிரியர் எஸ்.மலர்கொடி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார். முன்னதாக தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் சா.அருணன் வரவேற்றார் உதவி தலைமையாசிரியை பாகிரதிசாரதி, ஆசிரியர்கள் சுரேஷ் , கோபிநாத் , மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர்கள் ஷீலா, லதா, லட்சுமி, கலியபெருமாள் , சுனேத்திரா, உடற்கல்வி ஆசிரியர் மணிமாறன், ஆகியோர் காலை உணவு திட்டத்தின் நோக்கத்தை மாணவ மாணவிகளுக்கு விளக்கினர். முடிவில் காலை உணவு திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் முருகேஸ்வரி, தீபா, சுகன்யா நன்றி தெரிவித்தனர்.




