புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் மாங்கனாம்பட்டி
ஊ.ஒ.ந.நி.பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஆ.சந்திரா வரவேற்றார்.

தலைவியாக திருமதி ரெங்கநாயகி துணைத்தலைவியாக திருமதி வளர்மதி உட்பட பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் 22. பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்துத்தர அனைவரும் ஒப்புக்கொண்டனர். பார்வையாளராக ஆசிரியர் பயிற்றுனர் திருமதி சி. மணி கலந்து கொண்டார்.

முதல் கூட்டத்திலேயே 168 மாணவர்கள் அமர்ந்து காலை உணவு, மதிய உணவு உண்பதற்கு உணவுக் கூடம் கட்டித்தருவதாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நிறைவில் அய்யப்பன் நன்றி கூறினார்.




