• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலவச கண் பரிசோதனை முகாம்..,

மதுரை மாவட்டபார்வை இழப்பு தடுப் புச் சங்கம் மற்றும் பாப்புரெட்டி நினை வு அறக்கட்டளை சார்பாக அ.தி.மு.க., முன்னாள் பேரூர் செயலாளர் பாப்புரெட்டி நினைவு தினத்தை முன்னிட்டுஇலவச கண் பரிசோதனை முகாம் வாடிப்பட்டி ஓய்வூதியர் சங்கவளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் லதா பாபு ரெட்டி தலைமை தாங்கி னார். தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ராஜேந்திரன், நந்த கோபால், சாந்தகுமார், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் ஆட்டோ கண்ணன்ஆகியோர் முன்னி லை வகித்தனர். அறக்கட்டளை பொருளாளர் முனைவர் ஆர்.ராஜலட்சு மி வரவேற்றார். இந்த முகாமை த.வெ .க. வடக்கு மாவட்டசெயற்குழு உறுப்பி னர் ஏ.எம் கார்த்திக் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் சங்கரன் கோவில் கோவை சங்கரா கண் மருத் துவமனை மருத்துவ குழுவினர் கண் பரிசோதகர் சித்ரா தலைமையில் பத்மபிரியா, ஜெயராணி, ஜெயசக்தி, ஜெயகர் ஆகியோர் 110 பேருக்கு கண்பரிசோதனை செய்து 46 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில்செயலாளர் மதுசூதனன் நன்றி கூறினார்.