மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையை யொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரமும் பூஜையும் செய்யப்பட்டது.
இதில் பஜனை பாடல்கள் பாடி கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் அன்னதான வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடு களை சொக்கையா சுவாமி மடத்தின் நிர்வாக தலைவர் கே. மணிகண்டன் செய்திருந்தனர்.





