• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்திற்கு மாநகராட்சி சார்பில் ரவுண்டு அப் 56 பைசாவா???

ByKalamegam Viswanathan

Aug 10, 2026

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாட்டுத்தாவணி மார்க்கெட்ல காய்கறி வாங்க போயிருந்தோம்.. மார்க்கெட்டுக்குள்ள நுழையும் போது பைக்குக்கு முன்னாடி 5to 8 rs இருந்துச்சு. இப்ப சமீபமா பத்து ரூபா வாங்குறாங்க…
காய்கறி மார்க்கெட் அதேபோல மீன் மார்க்கெட்லயும் இந்த மாதிரி தான் காசு வசூல் பண்றாங்க…

அந்த வசூல் ரசீது சீட்டையில பைக் போயிட்டு வர்றதுக்கு gst கட்டி மீதி சில்லறை காசு கொடுக்க முடியாதுன்னு தெரிகிறதனால round off பண்றாங்க..நம்மகிட்டயே வாங்கி அவங்க ரவுண்டு அப் 56 பைசா பண்ணிக்கிறாங்க…இப்படி இத்தனைக்கும் பணம் கொடுத்து போற மார்க்கெட் குண்டும் குழியும் இல்லாமல் இருக்கா, சேறு, சகதி இல்லாம இருக்கா…

இந்த போடுற ஜிஎஸ்டி காசு எல்லாம் உண்மையிலேயே அரசாங்கத்துக்கு போகுதா… இங்க மட்டும் இல்ல இன்னும் நிறைய நிறைய இடங்களிலும் ஜிஎஸ்டினு சொல்லி சில்லரை சில்லறையாக காசு வாங்குறாங்க… இப்படியெல்லாம் எத்தனையே இடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வரிகட்டியும் தமிழ்நாடு கடன் ல இருக்குனு தான் சொல்லுறாங்க…

நியாயமா???
என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் தாங்கள் மாநகராட்சி ஆணையாக இது குறித்து கூறிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுகின்றன.