விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விண்ணகர பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா மற்றும் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதி விமர்சையாக நடைபெற்றன.

அதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திமுக வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.




