

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவில் கொண்டாடுவோம் என இந்து மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது.
வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது நிலையில், தமிழக அரசு இந்த விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வேண்டும் என்று இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் மற்றும் இந்து மகா சார்பில் கையில் விநாயகர் சிலையை சுமந்து வந்த படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அப்போது இந்து மகாசபை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்த போது: தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை தடையை மீறி கொண்டாடுவோம் என தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளார்.


