தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்ஸி) வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக வனத்துறையில் தற்போது வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 பணி இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்று வனத்துறை தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார்.
தமிழக அர்சு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து தற்போது 72 பணியிடங்களை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
வனத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி
