• Sun. Feb 9th, 2025

தமிழ்நாட்டில் பனிமூட்டம் தொடருமா?- வானிலை ஆய்வாளர்கள் கருத்து

ByIyamadurai

Feb 5, 2025

தமிழ்நாட்டில் இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று கடும் பனிமூட்டம் இருந்தது. காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள், விளக்கை எரியவிட்டவாறே சென்றனர்.

சென்னை விமான நிலை​யத்​தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்​கப்​பட்டன. விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பனிமூட்டம் காரணமாக சென்னையில் 40-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன.

சென்னை மட்டுமின்றி வடமாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டம் இருந்தது. இன்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்பட்டது. இன்னும் 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதுபோல் பனிமூட்டம் விட்டு விட்டு காணப்படும் என்றும், அதிலும் நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.