

பொறியியல் படிப்பு கலந்தாய்வு முடித்த மாணவர்களுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி வரை கல்லூரியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிவுற்றது என்பதும் இதில் 16574 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.