மதுரை காளவாசல் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பலசரக்கு மாளிகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தக்கடையில் விற்பனையாளர்களாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அருண் மற்றும் உஸ்மான் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடைக்கு வெளியூர்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகளை இறக்கி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக காய்கறிகள் அளவு குறைந்திருப்பதாக புகார் எழுந்தது!
இந்நிலையில் கடையின் மேலாளர் பாஸ்கரன் நடத்திய விசாரணையில், லாரிகள் மூலம் கடைக்கு வரும் காய்கறிகளில், 80ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை கடை ஊழியர்களான அருண் மற்றும் உஸ்மான் இருவரும் ஆகியோர் திருடியது தெரிய வந்தது!
தொடர்ந்து, பாஸ்கரன் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!