• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

10 சாக்கு மூடையில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்..,

ByK Kaliraj

Jun 2, 2026

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காரில் புகையிலை பாக்கெட்டுகள் வெம்பக்கோட்டை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சாத்தூர் துணை சூப்பிரண்டு குருசாமி,வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ,சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன், தலைமையில் போலீசார் வெம்பக்கோட்டை அருகே உள்ள பேர் நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் நடத்தினர்.

அப்போது சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் சாக்கு மூடைகள் அதிகமாக இருந்து தெரியவந்தது. உடனடியாக போலீசார் சாக்கு மூடைகளை பிரித்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 10 சாக்கு மூடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகள், நான்கு மூடைகளில் இருந்த குட்கா, உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூபாய் 6 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 43 ) என்பது தெரிந்தது உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.