• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

“ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சி தொடக்க விழா..,

BySeenu

Jun 3, 2026

பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, “ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சியின் தொடக்க விழா கோவை ஹோட்டல் ரேடிசன் புளூவில் இன்று மாலை நடைபெற்றது.

பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடங்கிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இக்கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது இத்தொடக்கவிழாவில் பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஜி. ஆர். கார்த்திகேயன் முதன்மை விருந்தினராகவும், ப்ரிகால் நிறுவனத் தலைவர் விஜய் மோகன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். அறக்கட்டளையின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

இவ்விழாவின் போது, கண்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கையேடு முறைப்படி வெளியிடப்பட்டு, அதற்கான தொலைநோக்குத் திட்டமும் காலக்கோடும் விவரிக்கப்பட்டன. முன்னாள் மாணவர்களின் உற்பத்தி, கல்வி, பொறியியல், சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளை வெளிப்படுத்தவுள்ள முதன்மைக் கண்காட்சியானது, நடப்பு ஆண்டு (2026) டிசம்பர் மாதம் 9 முதல் 13-ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தின் ஜிவி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.