• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அக் 17ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்… அறிவிப்பாணை வெளியீடு

ByA.Tamilselvan

Sep 22, 2022

அகில இந்திய காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், அக்டோபர் 19-ம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.