• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திமுக உட்கட்சி தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!!

ByA.Tamilselvan

Sep 22, 2022

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து, பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணமாக தலைமைக்கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று முதல் வருகிற 25ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.
வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, நகரிய, பகுதி, மாநகரச் செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. வேட்புமனு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் திமுக தலைமை தெரிவித்துள்ளது.