• Tue. Nov 17th, 2026

தமிழ்நாடு FL2 உரிமதாரர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீரபாண்டியன் பேட்டி..,

Byp Kumar

Nov 17, 2026

​திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தமிழ்நாடு FL2 உரிமதாரர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தொடர்பாக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தவெக அரசுக்கும், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் சங்கத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், அத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் அமைச்சர்களிடம் முறையிட்டுள்ளோம்.

​தற்போது FL2 பார்களுக்கான உரிமக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பிற இடங்களில் 50 சதவீதமும், சென்னையில் 150 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளோம்.

எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இந்தக் கட்டண உயர்வை, குறிப்பாக சென்னையில் குறைத்துத் தர வேண்டும் என்றும், மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் பார்களுக்கான நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்துத் தர வேண்டும்.

​மேலும், வெளிநாடுகளில் இருந்து தரமான மதுபானங்களை இறக்குமதி செய்து, முறைப்படி பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தாகவும், தங்கள் தொழிலுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்றும், சில யூடியூபர்கள் மற்றும் போலி செய்தியாளர்கள் அத்துமீறிச் செயல்படுவதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும்.

டாஸ்மாக் கடைகளைப் போல FL2 பார்களில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி-யை விட கூடுதல் கட்டணம் வைத்து விற்கப்படுவதில்லை என்றும், கிளப் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இதர வசதிகளுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.