• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணியில் இணையும் 3பெரிய கட்சிகள் ?

ByA.Tamilselvan

Sep 22, 2022

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தின் 3பெரும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அதற்கான பணிகளை மத்திய, மாநில கட்சிகள் இப்போதே துவங்கி விட்டன எனலாம். இந்நிலையில் வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பாமக, மநீம, தேமுதிக ஆகிய பெரும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. பாமக வரவால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தடுக்க புதிய உத்திகளை திமுக கையாளுகிறதாம்.