சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல என அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் பேசும் போது :- சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. 8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல. பிரச்சினைகளை சரிசெய்யவே முன்பு கூறினோம். 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். நிலங்களை எடுத்து தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.