கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 37, 700கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக அனைகளில் இருந்து வினாடிக்கு 14 000 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் 9க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் காட்டாற்று வெள்ளபெருக்கும் உருவாகியுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.