• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,733 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், கொரோனவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,53,848 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,631 பேர் குணமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சென்னையில் 205 பேர் புதிதாக கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4,60,74,497 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,58,075 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 300 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

 

செய்தியாளர்  -சிந்து