• Thu. Mar 30th, 2023

50 கோடி ஜீவனாம்சம் தர தயாராகும் சைதன்யா

Byமதி

Sep 24, 2021

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற தம்பதிகள் என்றால் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும். 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக பல்வேறு செய்திகள் உலா வருகிறது.

திருமணத்துக்கு பிறகு சமந்தா தனது பெயருக்கு பின்னால் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார். சமூக வலைத்தளத்திலும் சமந்தா அக்கினேனி என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு எஸ் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டார்.

இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்று பேசப்பட்டது.

மேலும் சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை, 4 மாதங்களாகவே இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

 

செய்தியாளர் பெயர் -சிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *