ஊரான் விட்டு நெய்யில் சொந்த வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார் என்று விண்ணதிர வீரமுழக்கமிட்ட விஜய், தனது பவர் சென்டர்களுக்கு த.வெ.க அரசில் அரசு பணிகளை வழங்கி தற்போது அரசாணையை வெளியிடாத மர்மம்தான் என்ன?
வெளிப்படையான அரசு நிர்வாகத்தை இந்த விஜய் வழங்குவான் என்று அறிவித்த முதல்வர் த.வெ.க அரசில் தனது ஆஸ்த்தான ஜோதிடராக இருந்த ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு சிறப்பு அதிகாரி என்ற அரசு பணி வழங்கினார் அதற்கான அரசாணை முறைப்படி வெளியிட்டவுடன் அதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் புயலை கிளப்பியது இதை எடுத்து அந்த அரசாணை தமிழக அரசு ரத்து செய்தது.

அதற்குப் பின் முதல்வர் விஜய்யின் வீயூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு முதல்வரின் ஆலோசகர்களாக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தாமதமாக மே 22 ஆம் தேதி தான் வெளியானது இது தொடர்பான அரசாணை பகிரங்கமாக முறைப்படி வெளியிடப்படவில்லை .ஆனால் விஷ்ணு ரெட்டி,ஜான் ஆரோக்கிய சாமி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர் என செய்திகள் வெளிய வந்தன.
அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் சமூக வலைதள அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகியோர் முதல்வரின் நேர்முக உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளதாக நமக்கு எப்போது தெரிய வருகிறது சமூக வலைதளங்களில் ஜெகதீஸ் பழனிச்சாமி விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிற பதிவை வெளியிடுகிற போது நாட்டு மக்களுக்கு அந்த செய்தி தெரிய வருகிறது. முறையாக அரசாணை இதுவரை வெளியாகி இருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை.
ஆனால் அதிகாரப்பூர்வமாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற முதல்வர் விஜய் அலுவலகத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி ,ராம்குமார் ஆகிய நான்கு பேர்களுக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த நவீன் மூஸா, முதல்வர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே செல்கிறார்,ஆனால் இவருக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு மட்டுமல்ல பாதுகாப்பில் இருக்கிற போலீஸ்சாருக்கு இன்னும் தெரியவில்லை உள்துறைகளும் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

முதல்வரின் சமூக வலைதள ரசிகர் மன்ற தலைவராக இருந்த குருவிற்கு தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பதின் தலைவராகவும் ,செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள சமூக ஊடகப்பிரிவு சிறப்பு அதிகாரியாக த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசாணைகள்வெளியிடப்படவில்லை.
முதல்வர் விஜய்யை சுற்றி நடக்கும் அரசு பணிகள் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள. பதவிகள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மர்மம்தான் நாட்டு மக்களுக்கு புரியவில்லை .முறையான நியாயமான தகுதி உள்ள சட்டரீதியான நியமனம் என்றால் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் முதல்வர் விஜய்க்கு ஏன் வந்தது .அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது தகுதி உள்ள யாரை வேண்டுமானாலும் சட்டப்படி நியமனம் செய்யலாம் .அப்படி நியமனம் செய்யப்பட்ட அந்த அறிவிப்புகளை அரசாணைவெளியிட என்ன தயக்கம்.
விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணிகள் குறித்து நீதியரசர்கள் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்று கவலை தெரிவித்ததோடு, இதேபோன்று பேரிடர்களிலே சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசு பணியை வழங்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்கள் .அதேபோல இந்த முதலமைச்சர் நட்பு வட்டாரங்கள் பணிகளுக்கு நீதிமன்றத்தில் கேள்வியாக வந்து விடுவோ? என்கின்ற பயம் தான்

அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களின் தகுதி என்ன? உழைப்பு என்ன? தியாகம் என்ன? பின்புலம் என்ன என்பதெல்லாம் கேள்வியாக வருகிறபோது ஒரே பதில் நாங்கள் விஜய்யின் நட்பு வட்டாரத்தில், சுற்றுவட்டாரத்தில், நெருக்கமாக இருக்கிறோம்.
விஜய் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே,நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே, த.வெ.க.கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும் என்று சொன்னால் வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அல்வா தான் கிடைக்குமா என்பது தன் கேள்வியாக இருக்கிறது.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் அதனை ரகசியம் காக்கப்படுவது மர்மமாக வைக்கப்படுவது அந்த மரபு முடிச்சு என்ன? ஒருவேளை இது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு விடும் என்கிற கவலையிலா? அச்சத்திலா ஆனால் ஒட்டுமொத்தமாக த.வெ.க அரசின் இந்த மர்மத்தை கண்டு மக்கள்தான் இன்றைக்கு வேதனையிலே விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .
காலை உணவு திட்டத்திற்கு ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் நிதியை எடுத்து பயன்படுத்தி உள்ளீர்கள் .இது குறித்து கேட்டால் காலை உணவு திட்டத்தில் எல்லோரும் உணவு அருந்துகிறார்கள். அதில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களும் உணவு அருந்துகிறார்கள் என கூறுகிறார்கள்.
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள காலை உணவு திட்டத்தை 8 வகுப்பு வரை விரிவுபடுத்தியுள்ளீர்கள். திட்டத்திற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் முறையான அறிவிப்பாக இருக்கும் ஆனால் அதை விடுத்து ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இன்றைக்கு இந்த காலை உணவு திட்டத்திற்கு ஒதுக்கி இருப்பது சமூக நீதிக்கே சவாலாக இருக்கிறது.
வெளிப்படுத்தன்மையோடு அரசை நடத்துவேன் என்று விஜய் வீர வசனம் பேசியதோடு சரி ஆனால் இன்றைக்கு அரசின் நிர்வாகமும், அரசின் பணி நியமனங்களும் ஒட்டுமொத்தமாக ஒரு மர்ம கதை போல ஒரு மாயாஜால விட்டலாச்சாரியார் கதை போலதான் சென்று கொண்டிருக்கிறது என கூறினார்.




