• Thu. Dec 5th, 2024

அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கொரோனா

ByA.Tamilselvan

Jul 31, 2022

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்தவாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து ஜூலை.21 ல்குணமடைந்துவிட்டார். என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதியானது. இதனால் மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என டாக்டர் குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *