தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – ஒன்றரை கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – அரைகப்
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஒரு வாணலியில் தண்ணீர், சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயார் செய்யவும். இதில் பாலைச் சேர்க்கவும். பாலைச் சேர்ப்பதால், பாகில் உள்ள தூசு தனியாகப் பொங்கி திரண்டு வரும். அதனை அப்படியே நீக்கி விட்டு அடுப்பை அணைக்கவும். தேங்காய்துருவல், ஏலக்காய் பொடியை ஒன்றாகச் சேர்த்து அதில் பாகை ஊற்றி, கொஞ்சம் சூடாக இருக்கும் போதே உருண்டையைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால், சுவையான தேங்காய் லட்டு தயார்.
குறிப்பு:
தேங்காய் துருவல் கலவையை உருண்டை பிடிக்கும் போது, சூடு குறைந்து சரியாக உருண்டை பிடிக்க வராவிட்டால், சிறிது நேரம் கலவையை வாணலியில் சூடுபடுத்தி, பின்னர் உருண்டை பிடிக்கலாம்.