தேவையான பொருட்கள்:
கோதுமை(அ)மைதா மாவு – 250கிராம்,
வெல்லம் – 250கிராம்,
தேங்காய்துருவல் – 1கப், நெய்-தேவையான அளவு,
ஏலக்காய் -4(பொடித்தது)
பால் -தேவையானஅளவு,
செய்முறை:
தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கி வைத்து கொண்டு வெல்லத்தை பாகுபோலகாய்ச்ச வேண்டும். (கம்பிபதம் வரும்வரை காய்ச்ச வேண்டியதில்லை) இந்த வெல்லப் பாகில், வதக்கி வைத்த தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து மாவில் கொட்டி பால் (மிதான சூட்டில்) ஊற்றி நன்கு நெகிழ்வாகப் பிசைந்து மாவின் மீது நல்லெண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
சப்பாத்தி உருண்டைபோல உருட்டி வைத்துக் கொண்டு வாழை இலையில் எண்ணெய் தடவி, பின்னர் உருண்டையை கைகளால் நன்கு தட்டி வைத்துக்கொண்டு தோசைக்கல்லில் நெய் விட்டுசுடவும். சுவையான தேங்காய்போளி ரெடி