ஆண்டுதோறும் செப்டம்பர் 16 ந்தேதி முதல் 30ந்தேதி வரை தூய்மை இந்தியா திட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தூய்மை ரயில் நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக,
காரைக்குடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியில், ரயில்வே நிலைய போலீஸார், ரயில்வே ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தை சுற்றியுள்ள தேவையில்லாத செடிகள், பிளாஸ்டிக் கவர்கள் போன்ற கழிவுப் பொருட்களையும், தண்டவாளத்தில் ரயில் பயணிகள் போட்டு சென்ற குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்குடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி..!
