

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா நிதியுதவி அளித்ததாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அதன் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்ட தன்னார்வ அமைப்புகளுக்கு சீனா நிதியுதவி அளித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடைக்காததால் ஆலையை விற்கப்போவதாக கடந்த ஜூன் மாதம் வேதாந்தா நிறுவனம் அறிவித்தது.