தமிழக அரசியலில் பரபரப்பு… ஆளுநரை திடீரென சந்தித்த விஜய்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர். இந்த நிலையில், ஆர்.என்.ரவியை தவெக தலைவர்…
ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த ஸார் யார்?- இபிஎஸ் கேள்வி
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர்(ஸார்) யார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !
பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என்று தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
தனது உடலில் சாட்டையால் அடித்து கொண்ட பின் அண்ணாமலை பேட்டி…
முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை சாட்டைடியாக சமரிக்கப் படுகின்றோம். தனது உடலில் சாட்டையால் அடித்து கொண்ட பின் அண்ணாமலை பேட்டி..பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக அரசை கண்டித்தும் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர்…
பாஜக போராட்டங்கள் திடீர் ஒத்தி வைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவைத் தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை…
ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக அண்ணாமலை இப்படி செய்யலாமா?: விசிக கண்டனம்
ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மனிதனை…
மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
மறைந்த இந்தியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு உயிரிழந்தார்.…
தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை நூதனப் போராட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்து நூதனப் போராட்டம் நடத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 900 பேர் மீது வழக்கு
சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 900 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து…
வழிகாட்டியை இழந்துவிட்டேன்… மன்மோகன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவால் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…








