• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாலை விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாகும் குடிநீர்..,

Byமுகமதி

Sep 13, 2026

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் மச்சுவாடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஆழத்தில் குடிநீர் குழாய் செல்வது தெரியாமல் குழி தோண்டி இயந்திர வண்டி குடிநீர்க் குழாய்களை உடைத்து விட்டது.

இதனால் அப்பகுதி வெள்ளைக்காடானது. கொளுத்தும் கோடை வெயிலில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சாலைப் பணியாளர்களின் அலட்சியப் போக்கால் புதுக்கோட்டை மாநகருக்கு வர வேண்டிய தண்ணீர் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள்.