மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. தனது உறவினர்களான செல்வராஜ், விஜயலட்சுமி, ராஜம்மாள், ஆனந்தகுமார் ஆகியோர் முகூர்த்த நாளான இன்று சுப நிகழ்ச்சிக்கு காரில் சென்று திரும்பிய போது மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே கார் விபத்தில் சிக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் வந்த தண்டபாணி, செல்வராஜ், விஜயலட்சுமி, ராஜம்மாள் ஆகியோர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்

இதே போல, வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார்.

108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து வர தாமதமானதால் சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே நேரத்தில் நடந்த இரு வேறு விபத்துக்களில் சிக்கியவர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று விடுமுறை நாள் முகூர்த்த நாள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 108 ஆம்புலன்ஸ் வராததே கருணாநிதி என்பவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினார்.
மேலும் உயிரிழந்த கருணாநிதி, ஆனந்த குமார், ராஜலட்சுமி ஆகியோரது உடல்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
போதிய மருத்துவர்கள் இல்லாததால் உடற்கூறாய்வு செய்வதில் தாமதம் ஏற்படும் நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களில் இருந்து குளிரூட்டும் பெட்டிகள் வரவழைக்கப்பட்டு மூன்று பேரின் உடல்களும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மருத்துவமனையில் ஆய்வு செய்து சென்ற நிலையில் இன்று நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு போதிய இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மருத்துவர்களும் வராதது அங்கிருந்தவர்களை கடும் வேதனைஅடைய செய்தது போர்க்கால அடிப்படையில் வாடிப்பட்டி சோழவந்தான் அலங்காநல்லூர் உள்ளிட்ட சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மற்றும் போதிய மருத்துவர்கள் நியமித்து பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








