தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவு
கடலூரில் தேர்தலன்று நடந்த கொலை சம்பவத்துடன் திமுகவினரை தொடர்புபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் அளித்த புகாரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக – கேரளா எல்லையில் கண்காணிப்பு குழு சோதனை நீட்டிப்பு
கேரளாவில் வருகிற 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையை நீட்டித்துள்ளனர்.மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத்…
வாக்காளர்கள் நீக்கம் : மறுவாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி…
Strong Room ல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு…
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கபட்டுள்ளது. மேலும்…
நகரியில் நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்!
நகரி தொகுதியில் இருந்து அமைச்சர் ரோஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். அடுத்த மாதம் 13-ஆம் தேதி ஆந்திராவில் பொது தேர்தலுடன் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று துவங்கி ஆந்திரா முழுவதும் சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கான வேட்பாளர்கள்…
தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் அறையில் சீல் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தேனி மக்களவை 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் (strong room) வைத்து அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு…
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஓரே கட்டமாக நேற்று நடந்தது. இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர்…
மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமில் சீல் வைக்கும் பணி-மாவட்ட ஆட்சியர் பேட்டி
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – அறைகளை சுற்றி சிசிடிவி காட்சிகள், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார். கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை…
வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு:
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில், மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மருத்துவ…
அரசு ஊழியர்கள் தேர்தல் விடுமுறை ரத்து உத்தரவு வாபஸ்
தேர்தலில் வாக்களிக்காத அரசு ஊழியர்களின் தேர்தல் விடுமுறை ரத்து என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையுடன் விடுவது நமது நாட்டின் தேர்தல் நடைமுறைச் சட்டம். அதன்படி, ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில்,…








