இன்றைய செய்திகள்
☘️போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. ☘️‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம். ☘️கோவையில் இந்தியா – ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்…
ஆஸ்திரேலியாவில் ஒலித்த வந்தே மாதரம்
ரஷ்யாவை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
வாக்களித்தார் அன்னியூர் சிவா!
. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல் ஆளாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக சார்பில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டி நிலவியுள்ளது.
கொடைக்கானலில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது, 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த உசிலம்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள்(56) என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கபடி போட்டி வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூரில் நடைபெற்ற முகவூர் நண்பர்கள் குழு சார்பாக நடத்தப்பட்ட 15ம் ஆண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தும், வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி பரிசுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…
பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு
விவேகானந்தர் பாறையில் தியானத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வானிலையை பொறுத்து ஹெலிகாப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாக செல்லவும் மாற்று ஏற்பாடு உள்ளது.…
ஆசிய கையெறிப்பந்து போட்டியில் தமிழக போலீசார் சாதனை…
உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை கையெறிப்பந்து அணி வீரர்கள் கண்ணன்,கபில் கண்ணன் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தேர்வாகினர். இப்போட்டியில்…
பிரஜ்வல் ரேவண்ணா கைது!
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெர்மனியில் இருந்து நாடு திரும்புகையில், பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர்.