விளைநிலங்களில் புகுந்துள்ள வெள்ளநீரை அகற்றுங்கள்.., முன்னாள் அமைச்சர், திருமங்கலம் எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்..!
மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் பெயதுள்ள கனமழையின் காரணமாக, வைகையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், விவசாய நிலங்களில் புகுந்துள்ள தண்ணீரை அகற்றவும், கண்மாய்க்கு வரும் உபரி நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்…
கறுப்பு பெட்டியை கண்டெடுத்த டெல்லி தகவல்தொழில்நுட்பக் குழு..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு படுக்கை விரிப்புகள்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள், படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன. தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்ச…
விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செய்யது முஸ்தபா ஹமால் வெளியிட்டார். இதல், அதிமுக சார்பில் அதிமுக நகரச் செயலாளர் முகம்மது நெயினார், தகவல் தொழில்நுட்ப…
வீரவணக்கம் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி
நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர்…
மதுரையில் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்..!
மதுரை மாடக்குளம் பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் திடீரென பெண்கள் நாற்றுகளை நட்டு விநோதப் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம், பழங்காநத்தம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து…
மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று…
கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகள் உட்பட 3 பேர் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். ரீத்தாபுரம் பேரூர் திமுக செயலாளரான இவர்,…
குமரியில் விசைப்படகு உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை..!
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் விசைப்படகு உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35-லட்சம் ரூபாய் மதிப்பிலான 90-சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆன்றணி பாபு கேரளாவில் விசைப்படகு வைத்து…
ஓட்டுநருக்கு மாரடைப்பு-சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி தருணம்
மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பால் மரணம் – சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் இன்று…








