உலகப்பிரசித்த பெற்ற இந்துக்களின் புண்ணியஸ்தலமான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக (குடமுழக்கு) விழா வருகின்ற 17ம் தேதி சீறும் சிறப்போடும் நடைபெற அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீனாட்சி அம்மன் குடமுழக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றும், குடமுழக்கை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. அப்பொழுது ஆகமவிதிகளின் அடிப்படையிலும்,பாரம்பரிய முறையில் நடைபெறும் என்றும்,தமிழ் ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள் பாடபிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டது என்றும்,பிற கோயில்களில் இருந்தும் ஓதுவார்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள் என்றும்,100 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள வழக்கத்தை பின்பற்றியே குட முழுக்கு நடத்தப்படும் என்று திருக்கோயில் நிர்வாகத்தால் கூறப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள் தமிழில் குடமுழக்கு நடத்தகோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
ஆனால் மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் நேற்றைய முன்தினம் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குடமுழக்கு விழா தமிழில் தான் நடத்த வேண்டுமென்றும், தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்றும் இல்லையென்றால் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகம் இயங்கக்கூடிய மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு முன்பாகவும், குடமுழக்கு விழா பணிகளில் ஈடுபட்டிருக்கும் பிராமண சிவாச்சாரிய பட்டர்கள் வீடுகளுக்கு முன்பாகவும் முற்றுக்கை போராட்டம் நடத்தப்படும் என்றும்,மதுரையை போர் களமாக தவெக அரசு மாற்ற வேண்டாமென மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசிய வழக்கறிஞர் போர்வையில் ஒழிந்திருக்கும் நக்சல்வாதியான இந்துவிரோத சக்தி வாஞ்சிநாதனையும், அவரது லெட்டர் பேடு கட்சி கூட்டாளிகளையும் இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் கிறிஸ்தவ இஸ்லாமிய லெட்டர் பேடு இயக்கங்கள்,சாதி மொழி பிரிவினைவாத சக்திகள் நக்சல் அமைப்புகள்,திராவிட இந்து விரோத நாத்திக சக்திகள் எல்லாம் ஒன்றிணைத்து மதுரை மதநல்லிணக்கம் மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த கும்பல் தான் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் புனிதமான மலை மீது ஆடு கோழி பலியிடுவதற்கு ஆதரவு தெரிவித்ததும், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தி கலவரத்தை உண்டாக்கிவிட்டு தற்போது தமிழ் மீதும்,மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் மீதும் அதீத தெய்வ பற்று இருப்பது போல் குடமுழக்கு விழாவை தமிழில் தான் நடத்த வேண்டுமென்று தமிழீன போலி போராளிகளாகவும்,போலி பக்தர்களாகவும் மக்களை ஏமாற்ற பல்வேறு வேசம் போட்டு வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தமிழ்கடவுள் முருகப்பெருமானின் மலையின் புனிதத்துவத்தை கெடுக்கும் விதமாகவும்,தீபத்தூணில் தீபம் ஏற்றவிடாமல் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும் செயல்பட்ட வாஞ்சிநாதனுக்கு ஆகமவிதிகளை பற்றியும்,சாஸ்திர சம்பிரதாயங்களை பற்றியும்,பிராமணர் சிவச்சாரிகளை பற்றியும்,நீதிமன்ற தீர்ப்பினை பற்றியும் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
சனாதன ஒழிக்க வேண்டுமென்று திட்டமிடும் கும்பலுடன் தொடர்பில் உள்ள வாஞ்சிநாதன் என்பவர் தான் கருவரையிலும்,யாகவேள்விச் சாலையிலும்,கோபுர விமானத்திலும் தமிழ் மந்திரம் ஒலிக்கப்பட வேண்டுமென்று கூறி வருகிறார்.
இந்த கும்பலின் ஒரே நோக்கம் இந்து சனாதன தர்மத்தையும்,இந்து ஆலய வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்கும் திருக்கோயிலில் கடவுளுக்கு சேவையாக பணிபுரிகின்ற பிராமணர்களை சாதி,மொழி ரீதியாக ஆலயத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றும், அப்பொழுது தான் இந்துசனாதன தர்மத்தை ஒழிக்க முடியும் என்றும்,இந்து ஆலயங்களை அழிக்க முடியும் என்று திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகவும்,சிவாச்சாரியர்களாகவும் இருக்கும் பிராமணர்களை சாதி ரீதியாக அவதூறு பரப்பி பிராமண துவேசம் செய்யும் விதமாக போராட்டம் நடத்தும் இந்த மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்பு என்ற பெயரில் ஒழிந்திருக்கும் இந்துவிரோத கும்பலின் ஒரே நோக்கம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மூத்த பட்டர்களான ராஜா பட்டர்,பிச்சை குருக்கள் அன்றைய அளித்த கடிதம் இந்த கூட்டமைப்பு கும்பல்களுக்கு அன்று இனித்தது. ஆனால் இன்றோ கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டு வரும் அதே ராஜா பட்டர் மீதும்,பிச்சை குருக்கள் மீதும் அவதூறு பரப்பி ராஜா பட்டரும்,பிச்சை குருக்களும் இப்போ கசக்குதா?
ராஜா பட்டராலும், பிச்சை குருக்களாலும் உபயதாரர்கள் மூலமாக கும்பாபிஷேக பணிகளுக்கு நன்மைகளும் பயன்களும் கிடைத்துள்ளன.ஆனால் இந்த கூட்டமைப்பு கும்பலால் திருக்கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு எந்த நன்மையும் பயனும் இல்லை.
தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டுமென்று கூறும் இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் உள்பட அனைவரும் சமஸ்கிருதத்திலும்,அரபு மொழியிலும்,ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளவர்கள் எப்படி தமிழர்கள் ஆவார்கள்?
தமிழுக்காக உயிரை கொடுத்தவர்களும்,தமிழை வளர்த்தவர்களும்,தமிழை நேசித்தவர்களும்,பெரும்பாலும் தமிழில் பெயர் வைத்தவர்களும் தான் தாங்கள் பார்ப்பனர்கள் என்று கூறும் பிராமணர்களே.
அப்படிபட்ட பிராமணர்களை எப்போ பார்த்தாலும் ஆதிக்க சாதி வெறிபிடித்தவர்கள், தமிழை எதிர்ப்பவர்கள் என்று ஒரு தவறான குற்றச்சாட்டை போலி நாத்திகவாதிகள் பிராமணர்களுக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு விடிந்தாலும் அடைந்தாலும் தினந்தோறும் விசம பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இதுபோன்ற கும்பல்கள்.

உலகம் முழுவதும் உள்ள எங்களுடைய சனாதன தர்ம கடவுள்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும்.அது எந்த மொழியில் அர்ச்சனை செய்தால் என்ன?குடமுழுக்கு எந்த மொழியில் நடந்தால் கடவுள் நம்பிக்கை இல்லாத உங்களுக்கு என்ன?
மற்றமத கடவுள்களின் மொழி பிரிவினைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்து மத கடவுள்கள் கிட்ட மட்டும் மொழியை திணிப்பது ஏன்?
இத்தனை நாளா இந்து மத இறை நம்பிக்கை மட்டும் இல்லாத இந்த கூட்டமைப்புக்கு திடீரென குடமுழுக்கு விழாவில் என்ன வேலை?
மற்ற மத கடவுளை விட உலகை ஆளும் எங்களது இந்துமத கடவுள்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும். இந்துசமய மக்களிடம் மொழி பிரிவினையை உண்டாக்கினார்கள். தற்போது இந்து கடவுள்கிடையே மொழி பிரிவினையை உண்டாக்க திட்டமிட்டு வரும் கும்பல் தான் இந்த கூட்டமைப்பு.
வடநாட்டில் வந்த பிராமணர்கள் வந்தேரிகள் அவர்கள் தமிழர் இல்லை என்றால்,அரபுநாட்டிலும் வாடிகனில் வந்தேரியாக வந்த இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழர்களா?
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று தமிழ் மொழியை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசிய ஈவேரா வழியில் வந்த இந்த கூட்டமைப்பு கும்பலுக்கு தமிழை பற்றி பேச என்ன தகுதி இருக்கு?
ஆகவே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்த நிலையிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் காணவரும் கும்பாபிஷேக விழாவில் எந்த ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெறாத வகையிலும்,பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்துகின்ற வகையில் அனைத்து துறைகளும் சார்ந்த அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் கும்பாபிஷேக பணிகளில் கவனம் செலுத்தி வருகின்ற வேலையில் அதனை திசைதிருப்பும் விதமாக குடமுழக்கு தமிழில் நடத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்பும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில் குடமுழக்கு விழாவில் சட்டம் ஒழுங்கையும்,குடமுழக்கையும் சீர்குழைக்கும் விதமாகவும்,கலவரத்தை உண்டாக்கும் விதமாகவும் தமிழில் தான் குடமுழக்கு நடத்த வேண்டுமென்று தமிழ் மீது அக்கறை இருப்பது போலௌவும்,பிராமண சிவாச்சாரியர்களை கும்பாபிஷேக பணிகளில் ஈடுபடுத்த கூடாதென்றும் திருக்கோயில் நிர்வாகத்தையும், சிவாச்சாரியர்களையும் கண்டித்து மீனாட்சி அம்மன் கோயில் முன்பாகவும்,பிராமண சிவாச்சாரிய பட்டர்கள் வீடுகளுக்கு முன்பாகவும் முற்றுக்கை போராட்டம் நடத்தப்படும் என்றும்,மதுரையை போர் களமாக மாற்றவும்,மதுரை மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கும் விதமாக வேண்டுமென்றே திட்டமிட்டு திருக்கோயில் நிர்வாகத்திற்கும், சிவச்சாரிய பட்டர்களுக்கும்,தவெக அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசிய மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற போர்வையில் ஒழிந்திருக்கும் நக்சல் அமைப்பை சேர்ந்த இந்துவிரோத சக்தியான வாஞ்சிநாதன் என்பவர் மீதும்,அவருடன் லெட்டர் பேடு அமைப்புகளின் கூட்டாளிகள் மீதும், இந்த இந்து விரோத கூட்டமைப்புக்கு மறைமுகமாக நிதி உதவி அளிக்கும் தேசவிரோத மதபிரிவினைவாத சக்திகள் மீதும் முன்னெச்சரிக்கையாக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடமுழக்கு தமிழில் நடத்தவேண்டுமென்று விளம்பர நோக்கத்திற்காகவும்,இஸ்லாமிய கிறிஸ்தவ மதவாத சக்திகளிடம் கையூட்டு பெற்று வியாபார நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் எந்த ஒரு ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கும் கும்பாபிஷேகம் முடியும் வரை காவல்துறை எக்காரணத்தை கொண்டும் அனுமதி அளிக்க கூடாதென்றும் கும்பாபிஷேகம் விழா சீரும் சிறப்போடும் தகுந்த பாதுகாப்புடன் நடைபெற வேண்டுமென காவல்துறை உள்பட அனைத்து அரசு துறை நிர்வாகத்திற்கும் இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி சார்பில் கோரிக்கை புகார் சமர்பிக்கப்படுகிறது.








