உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள், படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவில் படுக்கை விரிப்புகள் மற்றும் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கிற அனைத்து நோயாளிகளுக்கும் 500 நபருக்கு 1 கிலோஆப்பிள், 1கிலோ ஆரஞ்சு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கழக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை வழங்கினார்.

உடன் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தென்காசி நகர செயலாளர் சாதீர், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, மகேஷ் மாயவன், ஜெயக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் மாரிமுத்து, நெசவாளர் அணி அமைப்பாளர் KNLS சுப்பையா மகளிரணி வைத்தீஸ்வரி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.