நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்பன் சத்திரம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

நாகாலாந்து தீவிரவாத அமைப்பு ஒன்று, மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல்2015 ஆம் ஆண்டு நடத்தியது. 18 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாதுகாப்பாக மியான்மர் நாட்டு காடுகளில் சென்று பதுங்கினார்கள். இந்திய ராணுவம் இதை ஒரு கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டது. உடனடியாக மியான்மர் காடுகளில் நுழைந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி, அந்த தீவிரவாதிகளைக் கொன்றது. அந்தத் தாக்குதலை நடத்தியவர், அப்போது லெப்டினென்ட் ஜெனரலாக இருந்த பிபின் ராவத் தான். அப்போது நாகாலாந்தில் இருந்த நேரத்தில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் ராவத். கடைசியில் அவர் ஹெலிகாப்டர் விபத்திலேயே தமிழகத்தில் உயிரிழக்க நேரிட்டது துயரம்.
இது குறித்து முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இந்திய தேசத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த 13 பேர் உயிரிழிந்த துயரத்துக்கு வீரவணக்கம் செலுத்துவதாக மனமுறுக தெரிவித்துள்ளார்.