• Tue. Nov 5th, 2024

கறுப்பு பெட்டியை கண்டெடுத்த டெல்லி தகவல்தொழில்நுட்பக் குழு..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டியை டெல்லி அல்லது பெங்களுருக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.


விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்த தொழில் நுட்பகுழு, வெலிங்டன் ராணுவ மைய குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது. கருப்புப்பெட்டி என்பது அதன் நிறத்தை குறிப்பிடுவது அல்ல, பல்வேறு தகவல்கள் அதில் பதிவாகி இருக்கும் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *