குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு பொருள் (மு.வ): பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
குறள் 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு பொருள் (மு.வ): அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.
குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு பொருள் (மு.வ): செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு பொருள் (மு.வ): ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன் பொருள் (மு.வ): இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.
குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன் பொருள் (மு.வ): இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.
குறள் 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல் பொருள் (மு.வ): மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.
Thirukkural 22:
As counting those that from the earth have passed away,‘Tis vain attempt the might of holy men to say. Meanings:To describe the measure of the greatness of those who have…
குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர் பொருள் (மு.வ): செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.








