குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு பொருள் (மு .வ): ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று பொருள் (மு.வ): நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
குறள் 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர் பொருள் (மு.வ): (செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்.
குறள் 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும் பொருள் (மு .வ): தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
குறள் 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன் பொருள்(மு.வ): அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.
குறள் 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல் பொருள்(மு.வ): நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
குறள் 636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்நிற் பவை பொருள் (மு.வ): இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?
குறள் 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை பொருள் (மு.வ): அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு பொருள் (மு.வ): செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு பொருள் (மு.வ): செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.








