குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல் பொருள்(மு .வ): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவ ணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறள் 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல் பொருள்(மு.வ): ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.
குறள் 701
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி பொருள்(மு.வ): ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.
குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும் பொருள்(மு .வ): “யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.
குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர் பொருள் (மு .வ): அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்’ என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
குறள் 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும் பொருள்(மு.வ): (அரசனை) “எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்” என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
குறள் 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல் பொருள்(மு.வ): அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.
குறள் 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல் பொருள்(மு .வ): அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.
குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை பொருள்(மு.வ): அரசர் மறைப்பொருள் பேசும்போது எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை பொருள் (மு.வ): அரசர் மறைப்பொருள் பேசும்போது எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.








