• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 712

குறள் 712

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின்‌ நடையை ஆராய்ந்த நன்மை உடையவர்‌, அவையின்‌ செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்‌.

குறள் 711

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின்‌ தொகுதி அறிந்த தூய்மை உடையவர்‌, அவைக்களத்தின்‌ தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்‌.

குறள் 710

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்லது இல்லை பிற. பொருள் (மு.வ):யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

குறள் 709

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால் (ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

குறள் 796

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல் பொருள் (மு.வ): கேடு வந்தபோதும்‌ ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின்‌ இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்‌.

குறள் 708

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

குறள் 707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும் பொருள் (மு.வ): ஒருவன்‌ விருப்பம்‌ கொண்டாலும்‌ வெறுப்புக்‌ கொண்டாலும்‌, அவனுடைய முகம்‌ முற்பட்டு அதைத்‌ தெரிவிக்கும்‌; அம்‌ முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம் பொருள் (மு.வ): தன்னை அடுத்த பொருளைத்‌ தன்னிடம்‌ காட்டும்‌ பளிங்கு போல்‌. ஒருவனுடைய நெஞ்சத்தில்‌ மிகுந்துள்ளதை அவனுடைய முகம்‌ காட்டும்‌

குறள் 705

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண் பொருள் (மு.வ): (முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணராவிட்டால்‌, ஒருவனுடைய உறுப்புக்களுள்‌ கண்கள்‌ என்ன பயன்படும்‌?

குறள் 704

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு பொருள்(மு .வ): ஒருவன்‌ மனத்தில்‌ கருதியதை அவன்‌ கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர்‌ உறுப்பால்‌ ஒத்தவராக இருந்தாலும்‌ அறிவால்‌ வேறுபட்டவர்‌ ஆவர்‌.