தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவா? – பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பாஜக மாவட்டத் தலைவர்கள் பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்து திமுக அரசு ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
டெல்லி சட்டமன்ற தேர்தல் – விதிமுறை மீறியதாக முதல்வர் ஆதிஷி மீது வழக்கு
தேர்தல் விதிகளை மீறியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(பிப்ரவரி 5) ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள்…
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி!
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்த இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அதேபோல் சீனாவில்…
சென்னையில் காலநிலை உச்சி மாநாடு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாகத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற…
இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
2024- ம் ஆண்டு விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் முரளிதர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…
சென்னையில் கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்
சென்னையில் இன்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியில் இன்று காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால்…
தமிழகம் முழுவதும் பிப்.8-ம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் – இரா.முத்தரசன் அறிவிப்பு
பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசை கண்டித்து பிப். 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி- போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும்…
திகு திகு திருப்பரங்குன்றம்: 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினருக்கு தடுப்பு காவல்
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி…
ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி- தமிழக அரசு உத்தரவு
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973-ம் ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு வரையிலான…




