விருதுநகர் மாவட்டம் சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றது.

சிவகாசி கிளை மேலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார், உதவி மேலாளர் ராஜேஷ் முன்னிலையில் தொழிலதிபர் ஏ.ஆர்.டி.ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காப்பீட்டு திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், 70 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகாசி காரனேசன் சந்திப்பிலிருந்து எல்ஐசி அலுவலகம் வரை நடைபெற்ற பேரணியில் எல்.ஐ. சி வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், அலுவலக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டாடினர்.




