• Sat. Feb 15th, 2025

பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி- போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

ByIyamadurai

Feb 4, 2025

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் பெரியார் குறித்து விமர்சனம் செய்தே வாக்குசேகரிப்பில் சீமான் ஈடுபட்டுள்ளார். பெரியாரை சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்வதற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 உள்பட பல்வேறு பெரியாரிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன் இந்த அமைப்பினர் சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும், சீமான் பெரியாரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் . இதன் காரணமாக சீமான் மீது தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது இளைஞர் மீது காலணியை வீசியுள்ளார். அத்துடன் பெரியாருக்கு எதிராக அவர் முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்ததோடு, அந்த இளைஞரை பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது பெரியார் சிலை மீது காலணி வீசியவர், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அஜய்(32) என்பது தெரிய வந்தது. பெரியார் சிலை மீது இளைஞர் காலணி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது