• Sun. Feb 9th, 2025

இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

ByIyamadurai

Feb 4, 2025

2024- ம் ஆண்டு விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் முரளிதர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் முரளிதர் பதில் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “2024-ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில், 714 மிரட்டல்கள் உள்ளூர் விமானங்களுக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.