• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் காலநிலை உச்சி மாநாடு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ByP.Kavitha Kumar

Feb 4, 2025

சென்னையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாகத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.