காசாவில் இஸ்ரேலின் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. உணவுக்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 51 பேர் பலியானர்கள்.
காசா முனைப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கான் யூனிஸ் நகரில் உணவுக்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய டாங்குகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, உணவு விநியோக மையங்களுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் நிலவும் கடுமையான பட்டினியுடன், காசாவில் வறட்சியும் தீவிரமடைந்து வருவதாக யுனிசெஃப் (UNICEF) எச்சரித்துள்ளது.
காசாவில் உள்ள சுத்தமான குடிநீர் விநியோக மையங்களில் 40% மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. “குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்கியுள்ளனர்” என்று யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் காசா மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.