• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூரிடம் மனு கொடுக்க முயன்றபோது பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 2-வது நாளாகவும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த எம்.பி. மாணிக்கம் தாகூர் சின்ன உடைப்பு கிராம வழியாக நெடுஞ்சாலையில் செல்லும்போது அவரை சந்தித்து மனு அளிக்க, சின்ன உடைப்பு கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை அருகே காத்திருந்தனர். ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக அவரை நேரில் சந்திக்க முடியவில்லை.

இதையடுத்து, பொதுமக்களை காவல்துறையினர் கயிறு கட்டி தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக தங்களது வாழ்வாதார நிலங்களை ஒப்படைக்க மறுத்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாணிக்கம் தாக்கூர் அவரது தொகுதிக்குட்பட்ட மக்களின் மனுக்களை பெற மறுத்துச் சென்றார் ‌என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.