மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாட்சரம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம்,தோட்டக் கலை உதவிஇயக்குநர் தாமரை செல்வி, உதவி வேளான்மை அலுவலர்கள் உமா, பால் பாண்டி,பேரூராட்சி செயல் அலுவலர்கள் சிவகுமார் அழவந்தான் பொதுப்பணித்துறை பாசனஆய்வா ளர்கள் பிரதிப், முகமது சுலதான், வனகாப்பளர் ராஜபாண்டி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கும் முடிவெடுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லாமல் பெயருக்காக கடைநிலை ஊழியர்கள் கலந்து கொள்வதால் எந்த ஒரு பிரச்சனைக் கும் தீர்வு காண முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.எனவே இனிவரும் காலங்களில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். சிறுமலை வனப்பகுதிகளின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் காட்டு மாடுகள் காட்டு பன்றிகள் வருவதை கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள மட்டப்பாறை பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதுஅது மீண்டும் வனத்துக்குள் சென்றதா என்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான்கண்மாய் கரை சாலையைசீரமைக்க வேண்டும். 2018 கஜா புயலில் சீரழிந்த குட்லாம்பட்டி நீர்வீழ்ச்சியில் பருவமழை வருவதற்குள் சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும். செம்மினிபட்டி சர்வோதயா கண்மாய் பகுதியில் ஆக்கிரப்புகளை அகற்றி சீரமைத்துதார் சாலை பாலம் அமைக்க வேண்டும். திருவாலவாய நல்லூர் பகுதியில் உள்ளஆக்கிரமிப் புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்கள் கொடுத்து விவாதிக்கப்பட்டது. முடிவில் விவசாய சங்க தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.




